Monday, July 17, 2017

தேடாத தருணங்களில்

கூழாங் கற்களை
தேடிப் பழகிய கைகள்
வெறுங்கையாகவே
குவிந்து மூடிக்கொண்டன
ஒர் தீர்மானத்துடன்..

தேடுவதை ஏன்
நிறுத்திவிட்டாய் என
மெல்ல தட்டிக் கேட்கிறேன்
விரல்களை இதழ்களாக
விரித்துக் காண்ப்பிக்கிறது

தேடாத தருணங்களில்
மட்டுமே உருவாகும் சுயமான
ஒளிக் கற்களை

நன்றி: திண்ணை
http://puthu.thinnai.com/?p=35005

2 comments:

  1. மிக சிறந்த கவிதை.
    தேடாத தருணங்களில் தான் நம் அவதானிப்பு உள்ளது.

    ReplyDelete